caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ghaafir அத்தியாயம், வசனம் 65

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 60 · 40:65

هُوَ ٱلْحَىُّ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ فَٱدْعُوهُ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் என்றும் உயிரோடு இருப்பவன். வணக்கத்திற்குரிய (இறை)வன் அவனைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவனிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள், வழிபாடுகளை அவனுக்கு தூய்மைப்படுத்தியவர்களாக. அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.
Tamil Translation - Omar Sharifஅவன்தான் என்றும் உயிரோடு இருப்பவன். (வணங்கத்தகுதியான) இறைவன் அவனைத் தவிர அறவே இல்லை. ஆகவே, மார்க்கத்தை (-வழிபாடுகளை) அவனுக்கு தூய்மைப்படுத்தியவர்களாக அவனிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்! அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரியது.
Tamil Translation - Abdulhamid Baqawi65. அவன் நிரந்தரமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு ஓர் இறைவன் அறவே இல்லை. ஆகவே, அவனுக்கு நீங்கள் முற்றிலும் வழிப்பட்டுக் கலப்பற்ற மனதுடன் அவனை அழைப்பீர்களாக! உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தானது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70