caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ghaafir அத்தியாயம், வசனம் 64

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 60 · 40:64

ٱللَّهُ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ قَرَارًا وَٱلسَّمَآءَ بِنَآءً وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ فَتَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்தான் உங்களுக்கு பூமியை வசிப்பதற்கு வசதியாகவும் வானத்தை ஒரு கட்டிடமாகவும் அமைத்தான். அவன்தான் உங்களை உருவமைத்தான். உங்கள் உருவங்களை அழகாக்கினான். இன்னும், நல்ல உணவுகளில் இருந்து உங்களுக்கு உணவளித்தான். அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ் ஆவான். அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் மிக்க அருள்வளம் நிறைந்தவன்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்தான் உங்களுக்கு பூமியை (நீங்கள்) வசிப்பதற்கு வசதியாகவும் வானத்தை ஒரு கட்டிடமாகவும் அமைத்தான். இன்னும், அவன்தான் உங்களை உருவமைத்தான். ஆக, (மனிதர்களாகிய) உங்கள் உருவங்களை (ஏனைய படைப்புகளை பார்க்கிலும்) அழகாக்கினான். இன்னும், நல்ல உணவுகளில் இருந்து உங்களுக்கு உணவளித்தான். (இவற்றை எல்லாம் செய்த) அந்த அல்லாஹ்தான் (நீங்கள் வணங்கவேண்டிய) உங்கள் இறைவன் ஆவான். ஆக, அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi64. அல்லாஹ்தான் உங்களுக்கு பூமியை (நீங்கள்) வசித்திருக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, உங்களைச் சித்தரித்து, அழகான கோலத்திலும் உங்களை அமைத்தான். அவனே உங்களுக்கு மேலான உணவுகளையும் வழங்குகிறான். அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன். அகிலத்தார்களின் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியம் உடையவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70