caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ghaafir அத்தியாயம், வசனம் 5

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 60 · 40:5

كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَٱلْأَحْزَابُ مِنۢ بَعْدِهِمْ وَهَمَّتْ كُلُّ أُمَّةٍۭ بِرَسُولِهِمْ لِيَأْخُذُوهُ وَجَٰدَلُوا۟ بِٱلْبَٰطِلِ لِيُدْحِضُوا۟ بِهِ ٱلْحَقَّ فَأَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ عِقَابِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்களும் அவர்களுக்குப் பின்னர் வந்த (ஆது, ஸமூது, ஃபிர்அவ்ன் இன்னும் அவனுடைய) இராணுவங்களும் பொய்ப்பித்தனர். எல்லா சமுதாயத்தினரும் தங்களது தூதரை தண்டிப்பதற்கு நாடினார்கள். அசத்தியத்தைக் கொண்டு தர்க்கம் செய்தனர், அதன் மூலம் சத்தியத்தை அழிப்பதற்காக. ஆகவே, நான் அவர்களை (எனது தண்டனையைக் கொண்டு) பிடித்தேன். எனது தண்டனை எப்படி இருந்தது?
Tamil Translation - Omar Sharifஇவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்களும் அவர்களுக்குப் பின்னர் வந்த (ஆது, ஸமூது, ஃபிர்அவ்ன் இன்னும் பல) குழுக்களும் (தூதர்களை) பொய்ப்பித்தனர். எல்லா சமுதாயத்தினரும் தங்களது தூதரை தண்டிப்பதற்கு(ம் கொல்வதற்கும்) உறுதிபூண்டார்கள். இன்னும், அசத்தியத்தைக் கொண்டு (சத்தியத்தில்) தர்க்கம் செய்தனர், அதன் மூலம் சத்தியத்தை அழிப்பதற்காக. ஆகவே, நான் அவர்களை (எனது தண்டனையைக் கொண்டு) பிடித்தேன். ஆக, எனது தண்டனை எப்படி இருந்தது?
Tamil Translation - Abdulhamid Baqawi5. (இவ்வாறே) இவர்களுக்கு முன்னர் நூஹ்வுடைய மக்களும், அவர்களுக்குப் பின் வந்த ஒவ்வொரு கூட்டத்தினரும் (நம் வசனங்களைப் பொய்யாக்கித்) தங்களிடம் வந்த தூதர்களிடம் குற்றம் கண்டு பிடிக்கவே கருதினார்கள். சத்தியத்தை அழித்து விடுவதற்காகப் பொய்யான விஷயங்களைக் கொண்டு (அவர்களுடன்) தர்க்கித்தார்கள். ஆதலால், அவர்களை நாம் (வேதனையைக் கொண்டு) பிடித்துக் கொண்டோம். ஆகவே, (அவர்களுக்கு) எனது தண்டனை எப்படி இருந்தது? (என்பதைக் கவனிப்பீராக!)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70