مَا يُجَٰدِلُ فِىٓ ءَايَٰتِ ٱللَّهِ إِلَّا ٱلَّذِينَ كَفَرُوا۟ فَلَا يَغْرُرْكَ تَقَلُّبُهُمْ فِى ٱلْبِلَٰدِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரித்தவர்களைத் தவிர (வேறு யாரும்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் விவாதம் செய்ய மாட்டார்கள். ஆகவே, (நபியே) நகரங்களில் அவர்கள் (சுகமாக) சுற்றித்திரிவது உம்மை மயக்கிவிட வேண்டாம்.
Tamil Translation - Omar Sharifநிராகரித்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் விவாதம் செய்ய மாட்டார்கள். ஆகவே, (நபியே) நகரங்களில் அவர்கள் (சுகமாக) சுற்றித்திரிவது உம்மை மயக்கிவிட வேண்டாம்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. (நபியே!) நிராகரிப்பவர்களைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே! வீணாகத் தர்க்கிக்கும்) அவர்கள் பல நகரங்களிலும் (ஆடம்பரத்துடன் சுகபோகமாகச்) சுற்றித் திரிவது உம்மை மயக்கிவிட வேண்டாம்.