وَقَالَ ٱلَّذِىٓ ءَامَنَ يَٰقَوْمِ إِنِّىٓ أَخَافُ عَلَيْكُم مِّثْلَ يَوْمِ ٱلْأَحْزَابِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கை கொண்டவர் கூறினார்: என் மக்களே! நிச்சயமாக நான் உங்கள் மீது (நபிமார்களின் எதிரிகளுடைய) ராணுவங்களின் (வேதனை) நாளை போன்றதை (-அதுபோன்ற ஒரு வேதனை நாள் வருவதைப்) பயப்படுகிறேன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நம்பிக்கை கொண்டவர் கூறினார்: “என் மக்களே! நிச்சயமாக நான் உங்கள் மீது (நபிமார்களுக்கு எதிராக ஒன்றுகூடிய) குழுக்களுடைய (தண்டனை) நாளை போன்றதை (-அது போன்ற ஒரு தண்டனை உடைய நாள் வருவதை)ப் பயப்படுகிறேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi30. அதற்கு, நம்பிக்கைகொண்(டு தன் நம்பிக்கையை மறைத்துக் கொண்)டிருந்த அவர் (அவர்களை நோக்கி,) ‘‘என் மக்களே! (அழிந்துபோன) மற்ற கூட்டத்தினர்களின் (கெட்ட) நாள்களைப் போன்றவை, உங்கள் மீது வந்துவிடுமென்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.