يَٰقَوْمِ لَكُمُ ٱلْمُلْكُ ٱلْيَوْمَ ظَٰهِرِينَ فِى ٱلْأَرْضِ فَمَن يَنصُرُنَا مِنۢ بَأْسِ ٱللَّهِ إِن جَآءَنَا قَالَ فِرْعَوْنُ مَآ أُرِيكُمْ إِلَّا مَآ أَرَىٰ وَمَآ أَهْدِيكُمْ إِلَّا سَبِيلَ ٱلرَّشَادِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“எனது மக்களே! இன்றைய தினம் ஆட்சி உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் பூமியில் மிகைத்திருக்கிறீர்கள். அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து அது நம்மிடம் வந்தால் யார் நமக்கு உதவுவார்?” (இவ்வாறு அவர் கூறினார்.) (அதற்கு) ஃபிர்அவ்ன் கூறினான்: நான் (நல்லதாகக்) கருதுவதைத் தவிர (வேறு ஒரு பாதையை) உங்களுக்கு நான் காண்பிக்க மாட்டேன். நேரான பாதையைத் தவிர உங்களுக்கு நான் (வேறு எதற்கும்) வழிகாட்ட மாட்டேன்.
Tamil Translation - Omar Sharif“எனது மக்களே! உங்களுக்கு ஆட்சி இன்று இருக்கிறது. நீங்கள் பூமியில் மிகைத்திருக்கிறீர்கள். அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து - அது நம்மிடம் வந்தால் - யார் நமக்கு உதவுவார்?” (இவ்வாறு அவர் கூறினார்.) (அதற்கு) ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் (நல்லதாகக்) கருதுவதைத் தவிர உங்களுக்கு நான் காண்பிக்க மாட்டேன். இன்னும், நேரான பாதையைத் தவிர உங்களுக்கு நான் வழிகாட்ட மாட்டேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi29. ‘‘என் மக்களே! இன்றைய தினம் அதிகாரம் உங்கள் கையில்தான் இருக்கிறது. இத்தேசத்தில் (நீங்களே) ஆதிக்கம் வகிக்கிறீர்கள். ஆயினும், அல்லாஹ்வுடைய வேதனை நமக்கு வந்து விட்டால், (அதைத் தடுத்து) நமக்கு உதவி செய்பவன் யார்?'' (என்றும் கூறினார்). அதற்கு, ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி,) ‘‘நான் (சரி என்று) கண்டவற்றை தவிர (வேறொன்றையும்) நான் உங்களுக்கு அறிவிக்கவில்லை. நேரான வழியைத் தவிர மற்றெதனையும் நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை'' என்று கூறினான்.