caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ghaafir அத்தியாயம், வசனம் 31

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 60 · 40:31

مِثْلَ دَأْبِ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَٱلَّذِينَ مِنۢ بَعْدِهِمْ وَمَا ٱللَّهُ يُرِيدُ ظُلْمًا لِّلْعِبَادِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநூஹுடைய மக்கள், ஆது, ஸமூது, இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுக்கு ஏற்பட்ட வழமையான வேதனையைப் போன்று (ஒரு வேதனை உங்கள் மீது வருவதை நான் பயப்படுகிறேன்.) அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயத்தை நாடுகின்றவனாக இல்லை.
Tamil Translation - Omar Sharifநூஹுடைய மக்கள், ஆது, ஸமூது, இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுடைய வழமையைப் போன்றுதான் (உங்கள் வழமையும் இருக்கிறது. ஆகவே, அவர்களுக்கு வந்த தண்டனை உங்களுக்கும் வரும்). அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயத்தை நாடுகிறவனாக இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi31. (இதற்கு முன்னிருந்த) நூஹ்வுடைய மக்களுக்கும், ஆதுடைய மக்களுக்கும், ஸமூதுடைய மக்களுக்கும், அதற்குப் பின் வந்த மக்களுக்கும் நிகழ்ந்தது போன்ற (ஆபத்)து (உங்களுக்கும்) நிகழ்ந்து விடுமென்று நான் பயப்படுகிறேன். அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநியாயம் செய்ய விரும்பமாட்டான்'' என்றும்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70