caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 79

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:79

مَّآ أَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ ٱللَّهِ وَمَآ أَصَابَكَ مِن سَيِّئَةٍ فَمِن نَّفْسِكَ وَأَرْسَلْنَٰكَ لِلنَّاسِ رَسُولًا وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version“நன்மையில் எது உம்மை அடைந்ததோ (அது) அல்லாஹ்வின் புறத்திலிருந்து (அடைந்தது).” “தீமையில் எது உம்மை அடைந்ததோ (அது) உன் (தவறி)னால் அடைந்தது.” (நபியே!) உம்மை மக்களுக்கு ஒரு தூதராகவே அனுப்பினோம். சாட்சியால் அல்லாஹ்வே போதுமானவன்.
Tamil Translation - Omar Sharif“நன்மை எது உமக்கு ஏற்பட்டதோ, அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பட்டது. இன்னும், தீமை எது உமக்கு ஏற்பட்டதோ அது உம் புறத்திலிருந்து (உமது பாவத்தினால்) ஏற்பட்டது.” (நபியே!) உம்மை மக்களுக்கு ஒரு தூதராக அனுப்பினோம். (உமது தூதுத்துவத்திற்கு) சாட்சியால் அல்லாஹ்வே போதுமானவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi79. மேலும், (இவ்வாறு கூறுகின்றவனை நோக்கி) ‘‘உனக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்வினால் ஏற்பட்டது'' என்றும் ‘‘உனக்கு ஒரு தீங்கேற்பட்டால் அது (நீ இழைத்த குற்றத்தின் காரணமாக) உன்னால்தான் வந்தது'' (என்றும் கூறுவீராக. நபியே!) நாம் உம்மை ஒரு தூதராகவே மனிதர்களுக்கு அனுப்பியிருக்கிறோம். (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70