أَيْنَمَا تَكُونُوا۟ يُدْرِككُّمُ ٱلْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِى بُرُوجٍ مُّشَيَّدَةٍ وَإِن تُصِبْهُمْ حَسَنَةٌ يَقُولُوا۟ هَٰذِهِۦ مِنْ عِندِ ٱللَّهِ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَقُولُوا۟ هَٰذِهِۦ مِنْ عِندِكَ قُلْ كُلٌّ مِّنْ عِندِ ٱللَّهِ فَمَالِ هَٰٓؤُلَآءِ ٱلْقَوْمِ لَا يَكَادُونَ يَفْقَهُونَ حَدِيثًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடையும்; பலமான கோபுரங்களில் நீங்கள் இருந்தாலும் சரியே! அவர்களை ஒரு நன்மை அடைந்தால் “இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது” எனக் கூறுகின்றனர். அவர்களை ஒரு தீங்கு அடைந்தால் “(நபியே!) இது உம்மிடமிருந்து (எங்களுக்கு) ஏற்பட்டது” எனக் கூறுகின்றனர். (நபியே) நீர் கூறுவீராக: எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே (ஏற்பட்டன). இந்தக் கூட்டத்தினருக்கு என்ன நேர்ந்தது? ஒரு பேச்சையும் அவர்கள் விரைவாக விளங்குவதில்லையே!
Tamil Translation - Omar Sharifநீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடையும், பலமான கோபுரங்களில் நீங்கள் இருந்தாலும் சரியே! இன்னும், அவர்களுக்கு ஒரு நன்மை ஏற்பட்டால், “இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது” எனக் கூறுகிறார்கள். இன்னும், அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால், “(நபியே!) இது உம்மிடமிருந்து (எங்களுக்கு) ஏற்பட்டது” எனக் கூறுகிறார்கள். (நபியே) நீர் கூறுவீராக: “எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே (ஏற்பட்டன).” ஆக, இந்தக் கூட்டத்தினருக்கு என்ன நேர்ந்தது? ஒரு பேச்சையும் அவர்கள் விரைவாக (இலகுவாக) விளங்குவதில்லையே!
Tamil Translation - Abdulhamid Baqawi78. நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; மிகப் பலமான உயர்ந்த (கோட்டை) கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்தபோதிலும் சரியே! (நபியே! உமது கட்டளைப்படி போருக்குச் சென்ற) அவர்களை ஒரு நன்மை அடையும் பட்சத்தில் ‘‘இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது'' எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டு விட்டாலோ ‘‘(நபியே!) இது உம்மால்தான் (எங்களுக்கு ஏற்பட்டது)'' எனக் கூறுகின்றனர். (ஆகவே,) நீர் கூறுவீராக: ‘‘(நானாக என் இஷ்டப்படி உங்களுக்குக் கட்டளையிடவில்லை. அல்லாஹ் அறிவித்தபடியே நான் உங்களுக்கு கட்டளையிட்டேன். ஆகவே,) அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றன. இவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எவ்விஷயத்தையுமே இவர்கள் அறிந்து கொள்வதில்லையே!