caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 73

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:73

وَلَئِنْ أَصَٰبَكُمْ فَضْلٌ مِّنَ ٱللَّهِ لَيَقُولَنَّ كَأَن لَّمْ تَكُنۢ بَيْنَكُمْ وَبَيْنَهُۥ مَوَدَّةٌ يَٰلَيْتَنِى كُنتُ مَعَهُمْ فَأَفُوزَ فَوْزًا عَظِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்விடமிருந்து ஓர் அருள் உங்களை அடைந்தால் “நான் அவர்களுடன் இருந்திருக்க வேண்டுமே? (அவ்வாறு இருந்திருப்பின்) மகத்தான வெற்றி பெற்றிருப்பேனே!” என்று உங்களுக்கிடையிலும் அவனுக்கிடையிலும் எந்த நட்பும் இல்லாததைப் போன்று நிச்சயமாகக் கூறுகிறான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அல்லாஹ்விடமிருந்து ஓர் அருள் உங்களுக்கு கிடைத்தால் “நான் அவர்களுடன் இருந்திருக்க வேண்டுமே? (அவ்வாறு இருந்திருப்பின்) மகத்தான (செல்வ) நற்பேறு பெற்றிருப்பேனே!” என்று - உங்களுக்கிடையிலும் அவனுக்கிடையிலும் எந்த நட்பும் இல்லாததைப் போன்று - நிச்சயமாகக் கூறுகிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi73. அல்லாஹ்வுடைய அருள் உங்களுக்குக் கிடைத்தாலோ ‘‘நானும் உங்களுடன் இருந்திருக்க வேண்டாமா? அவ்வாறு இருந்திருந்தால் பெரும் பாக்கியத்தை நானும் அடைந்திருப்பேனே!'' என்று உங்களுடன் நட்பு(ம் நேசமும்) இல்லாதவர்கள் கூறுவதைப்போல் அவர்கள் கூறுகின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70