وَإِنَّ مِنكُمْ لَمَن لَّيُبَطِّئَنَّ فَإِنْ أَصَٰبَتْكُم مُّصِيبَةٌ قَالَ قَدْ أَنْعَمَ ٱللَّهُ عَلَىَّ إِذْ لَمْ أَكُن مَّعَهُمْ شَهِيدًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(போருக்கு செல்லாமல்) பின்தங்கிவிடுபவனும் நிச்சயமாக உங்களில் இருக்கிறான். உங்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் “திட்டமாக அல்லாஹ் என்மீது அருள் புரிந்தான். ஏனெனில் நான் அவர்களுடன் பிரசன்னமாகி இருக்கவில்லை” என்று கூறுகிறான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (போருக்கு செல்லாமல்) பின்தங்கிவிடுபவரும் நிச்சயமாக உங்களில் இருக்கிறார். ஆக, உங்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டால், “திட்டமாக அல்லாஹ் என் மீது அருள் புரிந்தான். ஏனெனில், நான் அவர்களுடன் (போரில்) பிரசன்னமாகி இருக்கவில்லை” என்று கூறுகிறார்.
Tamil Translation - Abdulhamid Baqawi72. (போருக்கு வராது) பின்தங்கி விடுபவர்களும் நிச்சயமாக உங்களில் சிலர் இருக்கின்றனர். (அவர்கள் நயவஞ்சகர்களே! ஏனெனில், போருக்குச் சென்ற) உங்களுக்கு ஒரு கஷ்டமேற்பட்டாலோ (அவர்கள்) ‘‘நாங்கள் உங்களுடன் வராமல் இருந்தது அல்லாஹ் எங்கள் மீது புரிந்த அருள்தான்'' என்று கூறுகிறார்கள்.