أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ يَعْلَمُ ٱللَّهُ مَا فِى قُلُوبِهِمْ فَأَعْرِضْ عَنْهُمْ وَعِظْهُمْ وَقُل لَّهُمْ فِىٓ أَنفُسِهِمْ قَوْلًۢا بَلِيغًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇ(த்தகைய)வர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் அறிவான். ஆகவே, (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து அவர்களுக்கு உபதேசிப்பீராக. அவர்களுடைய உள்ளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் கூற்றை அவர்களுக்குக் கூறுவீராக.
Tamil Translation - Omar Sharifஇவர்கள் எத்தகையோர் என்றால் இவர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். ஆகவே, (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணிப்பீராக! இன்னும் அவர்களுக்கு உபதேசிப்பீராக! இன்னும், அவர்களுடைய உள்ளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் சொல்லை அவர்களுக்கு சொல்வீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi63. இவர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான். ஆகவே, (நபியே!) நீர் அவர்(களின் குற்றங்)களைப் புறக்கணித்து அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வீராக. மேலும், (அவர்களிடம் உள்ள கெடுதல்களை) அவர்களுக்கு மனதில் படும்படித் தெளிவாக எடுத்துக் கூறுவீராக.