caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 64

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:64

وَمَآ أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ ٱللَّهِ وَلَوْ أَنَّهُمْ إِذ ظَّلَمُوٓا۟ أَنفُسَهُمْ جَآءُوكَ فَٱسْتَغْفَرُوا۟ ٱللَّهَ وَٱسْتَغْفَرَ لَهُمُ ٱلرَّسُولُ لَوَجَدُوا۟ ٱللَّهَ تَوَّابًا رَّحِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் எந்தத் தூதரையும் அனுப்பவில்லை. அல்லாஹ்வுடைய அனுமதி கொண்டு அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே தவிர. நிச்சயமாக அவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோது, உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி இருந்தால், (அத்துடன்) அவர்களுக்காக தூத(ராகிய நீ)ரும் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரியிருந்தால், பிழை பொறுப்பவனாக, பெரும் கருணையாளனாக அல்லாஹ்வைக் கண்டிருப்பார்கள்.
Tamil Translation - Omar Sharifநாம் எந்த ஒரு தூதரையும் அனுப்பவில்லை, அல்லாஹ்வுடைய அனுமதியுடன் அவருக்கு (எல்லோரும்) கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே தவிர. நிச்சயமாக அவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோது, உம்மிடம் வந்திருந்து, அவர்களும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி இருந்தால், இன்னும், அவர்களுக்காக தூத(ராகிய நீ)ரும் (அல்லாஹ்விடம் அவர்களுக்காக) பாவமன்னிப்புக் கோரியிருந்தால், தவ்பாவை அங்கீகரிப்பவனாக, பெரும் கருணையாளனாக அல்லாஹ்வை அவர்கள் கண்டிருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi64. அல்லாஹ்வுடைய அனுமதிகொண்டு (மக்கள்) அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் நாம் எந்த தூதரையும் அனுப்பவில்லை. ஆகவே, அவர்களில் (எவரும் இதற்கு மாறு செய்து) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்திலும், (நபியே!) உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் (தங்கள்) பாவமன்னிப்பைக் கோரினால், அத்துடன் அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால் பிழைபொறுத்தலை அங்கீகரிப்பவனாக மிகக் கருணையாளனாக அவர்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70