ٱلَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ ٱلنَّاسَ بِٱلْبُخْلِ وَيَكْتُمُونَ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ وَأَعْتَدْنَا لِلْكَٰفِرِينَ عَذَابًا مُّهِينًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்கள்) கருமித்தனம் செய்பவர்கள், மக்களுக்கு கருமித்தனத்தை ஏவுபவர்கள், அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்குக் கொடுத்ததை மறைப்பவர்கள். (இத்தகைய நன்றிகெட்ட) நிராகரிப்பாளர்களுக்கு இழிவான வேதனையை தயார்படுத்தினோம்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் கருமித்தனம் செய்கிறார்கள்; இன்னும், மக்களுக்கு கருமித்தனத்தை ஏவுகிறார்கள்; இன்னும், அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்குக் கொடுத்த (செல்வத்)தை மறைக்கிறார்கள். (இத்தகைய நன்றிகெட்ட) நிராகரிப்பாளர்களுக்கு இழிவுபடுத்தும் தண்டனையை நாம் தயார்படுத்தி இருக்கிறோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi37. அவர்கள் (தாங்கள்) கஞ்சத்தனம் செய்வதுடன் (மற்ற) மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி, அல்லாஹ் தன் அருளால் அவர்களுக்குக் கொடுத்ததையும் (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்துக் கொள்கிறார்கள். அந்த நன்றிகெட்டோருக்கு இழிவுபடுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.