وَٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ رِئَآءَ ٱلنَّاسِ وَلَا يُؤْمِنُونَ بِٱللَّهِ وَلَا بِٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَمَن يَكُنِ ٱلشَّيْطَٰنُ لَهُۥ قَرِينًا فَسَآءَ قَرِينًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் (அவர்கள்) மக்களுக்குக் காண்பிப்பதற்காகவே தங்கள் செல்வங்களை தர்மம் செய்பவர்கள், அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதவர்கள். (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன்.) எவருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகிவிட்டானோ அவன் நண்பனால் மிகக் கெட்டுவிட்டான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் மக்களுக்குக் காண்பிப்பதற்காகவே தங்கள் செல்வங்களை தர்மம் செய்கிறார்கள்; இன்னும், அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன் ஆவான்.) எவருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகிவிட்டானோ அவன் மிகக் கெட்ட நண்பனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi38. எவர்கள் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே (பெருமைக்காகத்) தங்கள் பொருள்களைச் செலவு செய்வதுடன் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன். ஆகவே,) எவனுக்கு ஷைத்தான் நண்பனாக இருக்கிறானோ அவன் நண்பர்களிலெல்லாம் மிகக் கெட்டவன் ஆவான்.