caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 33

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:33

وَلِكُلٍّ جَعَلْنَا مَوَٰلِىَ مِمَّا تَرَكَ ٱلْوَٰلِدَانِ وَٱلْأَقْرَبُونَ وَٱلَّذِينَ عَقَدَتْ أَيْمَٰنُكُمْ فَـَٔاتُوهُمْ نَصِيبَهُمْ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதாய், தந்தை, நெருங்கிய உறவினர்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் (அவர்களில்) ஒவ்வொருவருக்கும் வாரிசுகளை ஆக்கினோம். உங்கள் சத்தியங்கள் (மூலம் நீங்கள்) ஒப்பந்தம் செய்தவர்கள், அவர்களுக்கு அவர்களின் பங்கை கொடுத்து விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifதாய், தந்தை, நெருங்கிய உறவினர்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் (அவர்களில்) ஒவ்வொருவருக்கும் வாரிசுகளை நாம் ஏற்படுத்தினோம். இன்னும், எவர்களுடன் பங்காளி உறவை உங்கள் சத்தியங்கள் மூலம் நீங்கள் ஒப்பந்தம் செய்து உறுதி செய்தீர்களோ அவர்களுக்கு (உங்கள் சொத்தில்) அவர்களின் பங்கை கொடுத்து விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான். (இந்த சட்டம் பிற்காலத்தில் இறக்கப்பட்ட சொத்துரிமை சட்டத்தைக் கொண்டு மாற்றப்பட்டு விட்டது.)
Tamil Translation - Abdulhamid Baqawi33. தாய், தந்தை, உறவினர்கள் அல்லது நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் விட்டுச் செல்லும் ஒவ்வொரு பொருளுக்கும் (விகிதப்படி அவர்களுடைய சொத்தை அடையக்கூடிய) வாரிசுகளை நாம் குறிப்பிட்டே இருக்கிறோம். ஆகவே, அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்துவிடவும். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் (நன்கறிந்த) சாட்சியாளனாக இருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70