caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 32

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:32

وَلَا تَتَمَنَّوْا۟ مَا فَضَّلَ ٱللَّهُ بِهِۦ بَعْضَكُمْ عَلَىٰ بَعْضٍ لِّلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا ٱكْتَسَبُوا۟ وَلِلنِّسَآءِ نَصِيبٌ مِّمَّا ٱكْتَسَبْنَ وَسْـَٔلُوا۟ ٱللَّهَ مِن فَضْلِهِۦٓ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُلِّ شَىْءٍ عَلِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களில் சிலரை சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியதை (கண்டு) ஏங்காதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததிலிருந்து ஒரு பங்குண்டு. பெண்களுக்கும் அவர்கள் சம்பாதித்ததிலிருந்து ஒரு பங்குண்டு. அல்லாஹ்விடம் அவன் அருளிலிருந்து கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஉங்களில் சிலரை சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியதை (கண்டு) ஏங்காதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததிலிருந்து பங்குண்டு. பெண்களுக்கும் அவர்கள் சம்பாதித்ததிலிருந்து பங்குண்டு. இன்னும், அல்லாஹ்விடம் அவன் அருளிலிருந்து கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi32. உங்களில் சிலரை சிலர் மீது அல்லாஹ் மேன்மையாக்கி (அருள்புரிந்து) இருப்பதைப் பற்றி பேராசை கொள்ளாதீர்கள். ஆண்கள் சம்பாதித்தவை ஆண்களுக்குரியனவே. (அவ்வாறே) பெண்கள் சம்பாதித்தவையும் பெண்களுக்குரியனவே. ஆகவே, (ஆண் பெண் ஒவ்வொருவரும் உழைப்பின் மூலம்) அல்லாஹ்வுடைய அருளைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70