caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 25

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:25

وَمَن لَّمْ يَسْتَطِعْ مِنكُمْ طَوْلًا أَن يَنكِحَ ٱلْمُحْصَنَٰتِ ٱلْمُؤْمِنَٰتِ فَمِن مَّا مَلَكَتْ أَيْمَٰنُكُم مِّن فَتَيَٰتِكُمُ ٱلْمُؤْمِنَٰتِ وَٱللَّهُ أَعْلَمُ بِإِيمَٰنِكُم بَعْضُكُم مِّنۢ بَعْضٍ فَٱنكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ وَءَاتُوهُنَّ أُجُورَهُنَّ بِٱلْمَعْرُوفِ مُحْصَنَٰتٍ غَيْرَ مُسَٰفِحَٰتٍ وَلَا مُتَّخِذَٰتِ أَخْدَانٍ فَإِذَآ أُحْصِنَّ فَإِنْ أَتَيْنَ بِفَٰحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى ٱلْمُحْصَنَٰتِ مِنَ ٱلْعَذَابِ ذَٰلِكَ لِمَنْ خَشِىَ ٱلْعَنَتَ مِنكُمْ وَأَن تَصْبِرُوا۟ خَيْرٌ لَّكُمْ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களில் எவர் நம்பிக்கையாளரான, சுதந்திரமான பெண்களை மணம் முடிக்க பொருளாதார சக்தி பெறவில்லையோ, உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிய நம்பிக்கையாளரான உங்கள் அடிமைப் பெண்களிலிருந்து (அவர் மணம் புரியலாம்). அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை மிக அறிந்தவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவரே. ஆகவே (அடிமைகளை) அவர்களுடைய உரிமையாளரின் அனுமதியுடன் மணமுடியுங்கள், நல்ல முறையில் அவர்களுடைய மஹர்களைக் கொடுங்கள், (அப்பெண்கள்) விபசாரிகளாக இல்லாமல், பத்தினிகளாக, ரகசிய நண்பர்களை ஆக்கிக் கொள்ளாதவர்களாக (இருக்கவேண்டும்). (அடிமைப் பெண்கள்) மணம் முடிக்கப்பட்டு, அவர்கள் மானக்கேடானதை செய்தால் (குற்றம் செய்த) சுதந்திரமான பெண்கள் மீது (விதிக்கப்பட்டு)ள்ள தண்டனையில் பாதி அவர்கள் மீது (நிறைவேற்றப்படும்). உங்களில் பாவத்தை பயந்தவருக்கு இது (சலுகையாகும்). நீங்கள் சகித்திருப்பது உங்களுக்கு நன்று. அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், உங்களில் எவர் நம்பிக்கையாளரான, சுதந்திரமான பெண்களை மணம் முடிக்க பொருளாதார சக்தி பெறவில்லையோ, அவர் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிய நம்பிக்கையாளரான உங்கள் அடிமைப் பெண்களிலிருந்து அவர் மணம் புரியலாம். அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை மிக அறிந்தவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவரே. (அடிமைகளும் சுதந்திரமான நீங்களும் மார்க்கம் இன்னும் மனிதத்தில் சமமானவர்களே. அடிமைப் பெண்களை மணம் முடிப்பதில் எந்த தகுதி குறைவும் இல்லை.) ஆகவே, (அடிமைப் பெண்களை) அவர்களுடைய உரிமையாளரின் அனுமதியுடன் மணமுடியுங்கள்; இன்னும், நல்ல முறையில் அவர்களுடைய மஹ்ர்களைக் கொடுங்கள், (அப்பெண்கள்) பத்தினிகளாக இருக்க வேண்டும்; விபச்சாரிகளாக இல்லாமலும் ரகசிய நண்பர்களை எடுத்துக் கொள்ளாதவர்களாகவும் இருக்கவேண்டும். அவர்கள் (-அடிமைப் பெண்கள்) மணம் முடிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் மானக்கேடான செயலை செய்தால் (குற்றம் செய்த) சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படுகின்ற தண்டனையில் பாதி அவர்கள் மீது நிறைவேற்றப்படும். இது, (-அடிமைகளை மணமுடிப்பது) உங்களில் பாவத்தை பயந்தவருக்கு கொடுக்கப்பட்ட சலுகையாகும். நீங்கள் (சுதந்திரமான பெண்களை மணமுடிக்கும் வரை) பொறுமையாக இருப்பது உங்களுக்கு நல்லதாகும். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi25. உங்களில் எவருக்குச் சுதந்திரமான முஸ்லிம் பெண்களை திருமணம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர் நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களிலிருந்து திருமணம் செய்து கொள்ளலாம். அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை நன்கறிந்தே இருக்கிறான். (இவ்வடிமைப் பெண்களைக் கேவலமாக எண்ணாதீர்கள். நம்பிக்கையாளர்களாகிய) உங்களில் எவரும் மற்றவருக்குச் சமம்தான். ஆகவே, (நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களையும்) அவர்களுடைய எஜமானனின் அனுமதியைப் பெற்று சட்டப்படி அவர்களுக்குரிய மஹரையும் கொடுத்தே நீங்கள் அவர்களை திருமணம் செய்து கொள்ளவேண்டும். (அப்பெண்கள்) பத்தினிகளாக இருக்க வேண்டும். விபசாரிகளாகவோ அல்லது கள்ள நட்புக் கொள்பவர்களாகவோ இருக்கக்கூடாது. திருமணம் செய்துகொள்ளப்பட்ட (அடிமைப்) பெண் விபசாரம் செய்து விட்டால் அவளுக்கு (இத்தகைய குற்றம் செய்த அடிமையல்லாத) திருமணமான சுதந்திரமான பெண்ணுக்கு விதிக்கப்படும் தண்டனையில் பாதி விதிக்கப்படும். தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடுமென பயப்படுகிறாரோ அவருக்குத்தான் இந்த அனுமதி (அதாவது அடிமைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்பது.) எனினும், நீங்கள் சகித்துக்கொண்டு பொறுத்திருப்பது (முடியுமாயின் அதுவே) உங்களுக்கு நன்று. அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70