caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 162

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:162

لَّٰكِنِ ٱلرَّٰسِخُونَ فِى ٱلْعِلْمِ مِنْهُمْ وَٱلْمُؤْمِنُونَ يُؤْمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيْكَ وَمَآ أُنزِلَ مِن قَبْلِكَ وَٱلْمُقِيمِينَ ٱلصَّلَوٰةَ وَٱلْمُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَٱلْمُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ أُو۟لَٰٓئِكَ سَنُؤْتِيهِمْ أَجْرًا عَظِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎனினும் (நபியே!) அவர்களில் கல்வியில் தேர்ச்சிபெற்றவர்கள் இன்னும் நம்பிக்கையாளர்கள் உமக்கு இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையை நிலைநிறுத்துபவர்கள்; ஸகாத்தைக் கொடுப்பவர்கள்; அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள், (ஆகிய) இவர்களுக்கு மகத்தான கூலியைக் கொடுப்போம்.
Tamil Translation - Omar Sharifஎனினும் (நபியே!) அவர்களில் கல்வியில் தேர்ச்சிபெற்றவர்கள்; இன்னும் (உண்மையான) நம்பிக்கையாளர்கள் (உம்மிடம் மூடர்கள் கேள்வி கேட்டது போன்று கேட்க மாட்டார்கள். மாறாக,) உமக்கு இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டதையும் தொழுகையை நிலைநிறுத்துகின்ற வானவர்களையும் நம்பிக்கை கொள்வார்கள். இன்னும், ஸகாத்தைக் கொடுப்பவர்கள்; இன்னும், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள் (ஆகிய) இவர்கள் எல்லோருக்கும் மகத்தான கூலியைக் கொடுப்போம்.
Tamil Translation - Abdulhamid Baqawi162. எனினும் (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதி மிக்கவர்களும், உண்மை நம்பிக்கையாளர்களும், உம் மீது அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் அருளப்பட்டிருந்த (வேதங்கள் யா)வற்றையும் மெய்யாகவே நம்பிக்கை கொள்வார்கள் தொழுகையையும் கடைப்பிடித்துத் தொழுபவர்கள்; ஜகாத்தும் கொடுத்து வருபவர்கள்; அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள். ஆகிய இவர்களுக்கு (மறுமையில்) மகத்தான கூலியை நாம் கொடுப்போம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70