caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 150

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:150

إِنَّ ٱلَّذِينَ يَكْفُرُونَ بِٱللَّهِ وَرُسُلِهِۦ وَيُرِيدُونَ أَن يُفَرِّقُوا۟ بَيْنَ ٱللَّهِ وَرُسُلِهِۦ وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا۟ بَيْنَ ذَٰلِكَ سَبِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்து, அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பிரிவினை செய்து, (தூதர்களில்) “சிலரை நம்பிக்கை கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்" எனக் கூறி அதற்கு மத்தியில் ஒரு பாதையை ஏற்படுத்த நாடுகிறார்களோ,
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரிக்கிறார்களோ; இன்னும், அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பிரிவினை செய்ய விரும்புகிறார்களோ; இன்னும், (தூதர்களில்) “சிலரை நம்பிக்கை கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” எனக் கூறுகிறார்களோ; இன்னும் அதற்கு மத்தியில் (வெறுக்கத்தக்க) ஒரு பாதையை ஏற்படுத்த நாடுகிறார்களோ,
Tamil Translation - Abdulhamid Baqawi150. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பிரிவினை செய்துவிடக் கருதி (தூதர்களில்) ‘‘சிலரை நம்பிக்கை கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்'' எனவும் கூறி (நிராகரிப்புக்கும் நம்பிக்கைக்கும்) மத்தியில் ஒரு பாதையை ஏற்படுத்த விரும்புகிறார்களோ,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70