caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 125

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:125

وَمَنْ أَحْسَنُ دِينًا مِّمَّنْ أَسْلَمَ وَجْهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ وَٱتَّبَعَ مِلَّةَ إِبْرَٰهِيمَ حَنِيفًا وَٱتَّخَذَ ٱللَّهُ إِبْرَٰهِيمَ خَلِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்விற்கு தன் முகத்தை முற்றிலும் பணியவைத்து, அவர் நற்குணமுடையவராக இருக்க, இப்ராஹீமுடைய மார்க்கத்தை (அதில்) உறுதியுடையவராக பின்பற்றியவரைவிட மார்க்கத்தால் மிக அழகானவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை நண்பராக எடுத்துக் கொண்டான்.
Tamil Translation - Omar Sharifயார் அல்லாஹ்விற்கு தன் முகத்தை முற்றிலும் பணியவைப்பாரோ (-அல்லாஹ்வின் மார்க்க சட்டங்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு, அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி வழிபடுவாரோ); - அவரோ நற்குணமுடையவராக இருக்கும் நிலையில், - இன்னும், இப்ராஹீமுடைய மார்க்கத்தை (அதில்) உறுதியானவராக (இணைவைத்தலை விட்டு முற்றிலும் விலகியவராக) பின்பற்றுவாரோ அவரை விட மார்க்கத்தால் (-கொள்கையால்) மிக அழகானவர் யார்? இன்னும், அல்லாஹ் இப்ராஹீமை (தனது) உற்ற நண்பராக எடுத்துக் கொண்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi125. எவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் தன்முகத்தை பணியவைத்து இஸ்லாமில் உறுதியானவராக இருந்து, நன்மையும்செய்து, இப்றாஹீமுடைய (நேரான) மார்க்கத்தையும் பின்பற்றுகிறாரோ அவரைவிட அழகான மார்க்கத்தை உடையவர் யார்? அல்லாஹ் இப்றாஹீமை(த் தன்) உண்மை நண்பராக எடுத்துக் கொண்டிருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70