caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 115

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:115

وَمَن يُشَاقِقِ ٱلرَّسُولَ مِنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ ٱلْهُدَىٰ وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ ٱلْمُؤْمِنِينَ نُوَلِّهِۦ مَا تَوَلَّىٰ وَنُصْلِهِۦ جَهَنَّمَ وَسَآءَتْ مَصِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர் தனக்கு நேரான வழி தெளிவானதன் பின்னர் இத்தூதருக்கு முரண்பட்டு நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததைப் பின்பற்றுவாரோ அவரை அவர் திரும்பியதிலேயே திருப்பிவிடுவோம். இன்னும் அவரை நரகத்தில் எரிப்போம். அது மீளுமிடத்தால் (மிகக்) கெட்டுவிட்டது.
Tamil Translation - Omar Sharifஇன்னும், எவர் தனக்கு நேரான வழி தெளிவானதன் பின்னர் இத்தூதருக்கு முரண்பட்டு நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததைப் பின்பற்றுவாரோ அவரை அவர் திரும்பிய வழியிலேயே நாம் திருப்பிவிடுவோம். இன்னும், அவரை நரகத்தில் எரிப்போம். அது கெட்ட மீளுமிடமாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi115. எவர் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னரும் (அல்லாஹ்வுடைய) இத்தூதரை விட்டுப் பிரிந்து நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததில் செல்கிறாரோ அவரை நாம் அவர் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு (பின்னர்) அவரை நரகத்தில் சேர்த்து விடுவோம். அது செல்லும் இடங்களில் மிகக் கெட்டது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70