caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 114

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:114

لَّا خَيْرَ فِى كَثِيرٍ مِّن نَّجْوَىٰهُمْ إِلَّا مَنْ أَمَرَ بِصَدَقَةٍ أَوْ مَعْرُوفٍ أَوْ إِصْلَٰحٍۭ بَيْنَ ٱلنَّاسِ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ ٱبْتِغَآءَ مَرْضَاتِ ٱللَّهِ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அவர்களின் இரகசியங்களில் அதிகமானவற்றில் அறவே நன்மை இல்லை, தர்மத்தை அல்லது நன்மையை அல்லது மக்களுக்கிடையில் சமாதானத்தை ஏவியவரைத் தவிர. எவர் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி (மேற்கூறப்பட்ட) அதை செய்வாரோ நாம் அவருக்கு மகத்தான கூலியைத் தருவோம்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) அவர்களின் இரகசியங்களில் அதிகமானவற்றில் அறவே நன்மை இல்லை, தர்மத்தை; அல்லது, நன்மையை; அல்லது, மக்களுக்கிடையில் சமாதானத்தை ஏவியவர்கள் இரகசியம் பேசுவதில் தவிர. எவர் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி (மேற்கூறப்பட்ட) அவற்றை செய்வாரோ நாம் அவருக்கு மகத்தான கூலியைத் தருவோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi114. (நபியே!) அவர்கள் (உம்முடன்) பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் ஒரு நன்மையுமில்லை. ஆயினும், தானம் கொடுப்பதைப் பற்றியோ, நன்மையானவற்றைப் பற்றியோ, மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதைப் பற்றியோ பேசுபவற்றைத் தவிர. ஆகவே, எவரேனும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இவ்வாறு (இரகசியம்) பேசினால் (மறுமையில்) நாம் அவர்களுக்கு மகத்தான (நற்) கூலியைத் தருவோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70