caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 116

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:116

إِنَّ ٱللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِۦ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُ وَمَن يُشْرِكْ بِٱللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَٰلًۢا بَعِيدًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். அது அல்லாததை தான் நாடுபவருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்வுக்கு இணைவைப்பாரோ திட்டமாக அவர் தூரமான வழிகேடாக வழிகெட்டுவிட்டார்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். இன்னும், அது அல்லாததை தான் நாடுபவருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்விற்கு இணைவைப்பாரோ திட்டமாக அவர் தூரமான வழிகேடாக வழிகெட்டுவிட்டார்.
Tamil Translation - Abdulhamid Baqawi116. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதை அல்லாத (குற்றத்)தை (அதுவும்) தான் விரும்பியவர்களுக்கே மன்னிப்பான். ஆகவே, எவரேனும் அல்லாஹ்வுக்கு இணைவைத்தால் அவர் வெகுதூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70