caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 11

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:11

يُوصِيكُمُ ٱللَّهُ فِىٓ أَوْلَٰدِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ ٱلْأُنثَيَيْنِ فَإِن كُنَّ نِسَآءً فَوْقَ ٱثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ وَإِن كَانَتْ وَٰحِدَةً فَلَهَا ٱلنِّصْفُ وَلِأَبَوَيْهِ لِكُلِّ وَٰحِدٍ مِّنْهُمَا ٱلسُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُۥ وَلَدٌ فَإِن لَّمْ يَكُن لَّهُۥ وَلَدٌ وَوَرِثَهُۥٓ أَبَوَاهُ فَلِأُمِّهِ ٱلثُّلُثُ فَإِن كَانَ لَهُۥٓ إِخْوَةٌ فَلِأُمِّهِ ٱلسُّدُسُ مِنۢ بَعْدِ وَصِيَّةٍ يُوصِى بِهَآ أَوْ دَيْنٍ ءَابَآؤُكُمْ وَأَبْنَآؤُكُمْ لَا تَدْرُونَ أَيُّهُمْ أَقْرَبُ لَكُمْ نَفْعًا فَرِيضَةً مِّنَ ٱللَّهِ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்கள் பிள்ளைகளில் (சொத்து பங்கிடுதல் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான். ஆணுக்கு இரு பெண்களின் பங்கு போன்று (பாகம்) உண்டு. (ஆண் பிள்ளைகள் இன்றி) இரண்டிற்கும் மேலான பெண்களாக இருந்தால் (தாய் தந்தை) விட்டுச் சென்ற(சொத்)தில் மூன்றில் இரண்டு (பங்குகள்) அவர்களுக்கு உண்டு. (பிள்ளை) ஒருத்தியாக இருந்தால் அவளுக்கு (சொத்தில்) பாதி (பங்கு)உண்டு. (இறந்த) அவருக்கு பிள்ளை இருந்தால் அவருடைய தாய், தந்தைக்கு (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் ஆறில் ஒன்று உண்டு. (இறந்த) அவருக்கு பிள்ளை இல்லாமல் அவருக்கு அவருடைய தாய், தந்தை வாரிசானால் அவருடைய தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு. (இறந்த) அவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவருடைய தாய்க்கு ஆறில் ஒன்று உண்டு. (ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு.) (இவை அனைத்தும் வஸிய்யத் எனும்) அவர் கூறும் மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர் (கொடுக்கப்படும்). உங்கள் தந்தைகள் இன்னும் உங்கள் ஆண் பிள்ளைகளில் யார் உங்களுக்குப் பலனளிப்பதில் மிக நெருங்கியவர் என்பதை அறியமாட்டீர்கள். (இவை) அல்லாஹ்வின் சட்டமாக(வும் நிர்ணயிக்கப்பட்ட பங்காகவும் ஆக்கப்பட்டுள்ளன). நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஉங்கள் பிள்ளைகளில் (சொத்து பங்கிடுதல் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான். ஆணுக்கு, இரு பெண்களின் பங்கு போன்று (பாகம்) உண்டு. (ஆண் பிள்ளைகள் இல்லாமல், இரண்டு அல்லது) இரண்டிற்கும் மேலான பெண் (பிள்ளை)களாக இருந்தால் (தாய் தந்தை) விட்டுச் சென்ற(சொத்)தில் மூன்றில் இரண்டு (பங்குகள்) அவர்களுக்கு உண்டு. (ஆண் பிள்ளைகளும் இல்லாமல், பெண் பிள்ளை) ஒருத்தியாக மட்டும் இருந்தால் அவளுக்கு (சொத்தில்) பாதி (பங்கு) உண்டு. (இறந்த) அவருக்கு பிள்ளை இருந்தால் அவருடைய தாய், தந்தைக்கு (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் ஆறில் ஒன்று உண்டு. (இறந்த) அவருக்கு பிள்ளை இல்லாமல் அவருக்கு அவருடைய தாய், தந்தை வாரிசுகளாக ஆகினால் அவருடைய தாய்க்கு மூன்றில் ஒன்று(ம் தந்தைக்கு மீதமுள்ள சொத்து முழுவதும்) உண்டு. (இறந்த) அவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவருடைய தாய்க்கு ஆறில் ஒன்று உண்டு. (ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு.) (இவை அனைத்தும் வஸிய்யத் எனும்) அவர் கூறும் மரண சாசனம், அல்லது (அவருடைய) கடனுக்குப் பின்னர் (கொடுக்கப்படும்). உங்கள் தந்தைகள் இன்னும் உங்கள் ஆண் பிள்ளைகளில் யார் உங்களுக்குப் பலனளிப்பதில் மிக நெருங்கியவர் என்பதை அறியமாட்டீர்கள். (இவை) அல்லாஹ்வின் சட்டமாக(வும் நிர்ணயிக்கப்பட்ட பங்காகவும்) இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi11. உங்கள் சந்ததியில் (ஆணும், பெண்ணும் இருந்தால்) ஓர் ஆணுக்கு இரு பெண்க ளுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான். (உங்கள் சந்ததிகளாகிய) அவர்கள் (ஆண் இன்றி) பெண்களாகவே இருந்து அவர்கள் (இருவராகவும் அல்லது) இருவருக்கு அதிகமாகவும் இருந்தால் (எத்தனை பேர்கள் இருந்தபோதிலும்) அவர் (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் மூன்றில் இரண்டையே (சமமாக) அடைவார்கள். ஒரே ஒரு பெண்ணாக இருந்தால் அவளுக்கு (இறந்தவர் விட்டுச் சென்ற பொருளில்) பாதி உண்டு. (உங்களில்) இறந்தவருக்கு சந்ததியுமிருந்து (தாய் தந்தையும் இருந்தால்) தாய், தந்தை ஒவ்வொருவருக்கும் (இறந்தவர்) விட்டுச்சென்ற (சொத்)தில் ஆறில் ஒரு பாகமுண்டு. இறந்தவருக்கு வாரிசு இல்லாமலிருந்து தாய், தந்தைகளே, வாரிசுக்காரர்களானால் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்தான். (மற்ற இரு பாகமும் தந்தையைச் சாரும். இத்தகைய நிலைமையில் இறந்தவருக்கு பல) சகோதரர்கள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒன்றுதான் (மீதமுள்ளது தந்தையைச் சாரும். ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு. இவை அனைத்தும் வஸீயத் எனும்) மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே (மீதமுள்ள சொத்தில் பங்கு பிரிக்க வேண்டும்). உங்கள் தந்தைகளோ அல்லது உங்கள் சந்ததிகளோ (இவர்களில்) உங்களுக்குப் பலனளிப்பதில் நெருங்கியவர்கள் யாரென்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். (ஆகவே, இவை) அல்லாஹ்வினால் (உங்கள் மீது) விதிக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான். (ஆகையால் அவன் விதித்தபடி பங்கிட்டுக் கொள்ளுங்கள்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70