caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zumar அத்தியாயம், வசனம் 67

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 59 · 39:67

وَمَا قَدَرُوا۟ ٱللَّهَ حَقَّ قَدْرِهِۦ وَٱلْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُۥ يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَٱلسَّمَٰوَٰتُ مَطْوِيَّٰتٌۢ بِيَمِينِهِۦ سُبْحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (-இணைவைப்பவர்கள்) அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டிய முறையில் கண்ணியப்படுத்தவில்லை. பூமி அனைத்தும் மறுமை நாளில் அவனது கைப்பிடியில் இருக்கும். வானங்கள் (அனைத்தும்) அவனது வலக்கையில் சுருட்டப்பட்டதாக இருக்கும். அவன் மிகப் பரிசுத்தமானவன். அவர்கள் இணை வைப்பதை விட்டு அவன் மிக உயர்ந்தவன்.
Tamil Translation - Omar Sharif(இணைவைப்பவர்கள்) அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டிய முறையில் கண்ணியப்படுத்தவில்லை. பூமி அனைத்தும் மறுமை நாளில் அவனது கைப்பிடியில் இருக்கும். வானங்கள் (அனைத்தும்) அவனது வலக்கையில் சுருட்டப்பட்டதாக இருக்கும். அவன் மிகப் பரிசுத்தமானவன். இன்னும், அவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் மிக உயர்ந்தவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi67. (நபியே!) அல்லாஹ்வின் (மேலான) தகுதிக்குத் தக்கவாறு அவனை அவர்கள் கண்ணியப்படுத்துவதில்லை. பூமி (இவ்வளவு பெரிதாக இருந்த போதிலும் அது) முழுவதும் மறுமையில் அவனுடைய ஒரு கைப்பிடியில் இருக்கும். மேலும், வானங்கள் அனைத்தும் சுருட்டப்பட்டு அவனுடைய வலது கையில் இருக்கும். இவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் மிக மேலானவன்; அவன் மிக பரிசுத்தமானவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70