وَٱتَّبِعُوٓا۟ أَحْسَنَ مَآ أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَكُمُ ٱلْعَذَابُ بَغْتَةً وَأَنتُمْ لَا تَشْعُرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட மிக அழகியவற்றை நீங்கள் பின்பற்றுங்கள், நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில் திடீரென உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில் திடீரென உங்களுக்கு தண்டனை வருவதற்கு முன்னர், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட மிக அழகிய (வேதத்தை; இன்னும், நபியின் மூலம் வழங்கப்பட்ட சுன்னா என்ற அழகிய ஞானத்)தை நீங்கள் (உறுதியாக) பின்பற்றுங்கள்,
Tamil Translation - Abdulhamid Baqawi55. (மனிதர்களே!) நீங்கள் அறியாத விதத்தில் திடீரென உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னதாகவே உங்கள் இறைவனால் உங்களுக்கு இறக்கிவைக்கப்பட்ட, (வேதங்களில்) மிக அழகான (இ)தைப் பின்பற்றுங்கள்.