caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zumar அத்தியாயம், வசனம் 56

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 59 · 39:56

أَن تَقُولَ نَفْسٌ يَٰحَسْرَتَىٰ عَلَىٰ مَا فَرَّطتُ فِى جَنۢبِ ٱللَّهِ وَإِن كُنتُ لَمِنَ ٱلسَّٰخِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் விஷயங்களில் நான் குறைசெய்து விட்டதனால் எனக்கு நேர்ந்த துக்கமே! நிச்சயமாக நான் பரிகாசம் செய்வோரில்தான் இருந்தேன் என்று எந்த ஓர் ஆன்மாவும் சொல்லாமல் இருப்பதற்காக (இந்த உலகத்தில் நீங்கள் வாழும் போதே அவனுக்கு கீழ்ப்படிந்து விடுங்கள்!)
Tamil Translation - Omar Sharif“அல்லாஹ்வின் விஷயங்களில் நான் குறைசெய்து விட்டதால் எனக்கு நேர்ந்த துக்கமே! நிச்சயமாக நான் கேலி செய்பவர்களில்தான் இருந்தேன்” என்று எந்த ஓர் ஆன்மாவும் சொல்லாமல் இருப்பதற்காக (இந்த உலகத்தில் நீங்கள் வாழும்போதே அவனுக்கு கீழ்ப்படிந்து விடுங்கள்!)
Tamil Translation - Abdulhamid Baqawi56. (உங்களில்) எவரும், ‘‘அல்லாஹ்வைப் பற்றி நான் (கவனிக்க வேண்டியவற்றைக் கவனிக்காது) தவறிவிட்டேன். என் கேடே! நான் (இவற்றைப்) பரிகாசம் செய்து கொண்டிருந்தேனே!'' என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70