caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zumar அத்தியாயம், வசனம் 54

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 59 · 39:54

وَأَنِيبُوٓا۟ إِلَىٰ رَبِّكُمْ وَأَسْلِمُوا۟ لَهُۥ مِن قَبْلِ أَن يَأْتِيَكُمُ ٱلْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்கள் இறைவன் பக்கம் திரும்புங்கள்! அவனுக்கு முற்றிலும் பணிந்து விடுங்கள் உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னர். (வேதனை வந்த) பிறகு, நீங்கள் உதவப்பட மாட்டீர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், உங்கள் இறைவன் பக்கம் திரும்புங்கள்! உங்களுக்கு தண்டனை வருவதற்கு முன்னர் அவனுக்கு முற்றிலும் பணிந்து விடுங்கள். (அல்லாஹ்வின் தண்டனை வந்துவிட்டால்) பிறகு, நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi54. ஆகவே, (மனிதர்களே!) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே, நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிபட்டு நடங்கள். (வேதனை வந்து விட்டாலோ,) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70