قُلْ إِنِّىٓ أُمِرْتُ أَنْ أَعْبُدَ ٱللَّهَ مُخْلِصًا لَّهُ ٱلدِّينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும், வழிபாடுகளை அவனுக்கு (மட்டும்) நான் தூய்மையாக செய்ய வேண்டும்” என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும், மார்க்கத்தை - வணக்க வழிபாடுகளை அவனுக்கு (மட்டும்) நான் தூய்மையாக செய்ய வேண்டும்” என்று நிச்சயமாக நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.
Tamil Translation - Abdulhamid Baqawi11. (நபியே!) கூறுவீராக: ‘‘முற்றிலும் நான் அல்லாஹ்வுக்கே வழிப்பட்டு, வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கி அவன் ஒருவனையே வணங்குமாறு ஏவப்பட்டுள்ளேன்.