caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Faatir அத்தியாயம், வசனம் 41

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 43 · 35:41

إِنَّ ٱللَّهَ يُمْسِكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ أَن تَزُولَا وَلَئِن زَالَتَآ إِنْ أَمْسَكَهُمَا مِنْ أَحَدٍ مِّنۢ بَعْدِهِۦٓ إِنَّهُۥ كَانَ حَلِيمًا غَفُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அல்லாஹ் வானங்களையும் பூமியையும் அவை இரண்டும் (அவற்றின் இடங்களை விட்டு) நீங்கிவிடாமல் தடுத்து வைத்திருக்கின்றான். அவை இரண்டும் நீங்கிவிட்டால் அவனுக்குப் பின்னர் எவர் ஒருவரும் அவ்விரண்டையும் தடுத்து வைக்க முடியாது. நிச்சயமாக அவன் மகா சகிப்பாளனாக மகா மன்னிப்பாளனாக இருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அல்லாஹ் வானங்களையும் பூமியையும் அவை இரண்டும் (அவற்றின் இடங்களை விட்டு) நீங்கிவிடாமல் தடுத்து வைத்திருக்கிறான். அவை இரண்டும் நீங்கிவிட்டால் அவனுக்குப் பின்னர் எவர் ஒருவரும் அவ்விரண்டையும் தடுத்து வைக்க முடியாது. நிச்சயமாக அவன் மகா சகிப்பாளனாக, மகா மன்னிப்பாளனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi41. வானங்களும் பூமியும் (தத்தம் எல்லையிலிருந்து) விலகிவிடாதபடி தடுத்துக் கொண்டிருப்பவன் நிச்சயமாக அல்லாஹ்தான். (தம் எல்லையில் இருந்து) அவ்விரண்டும் சாய முற்பட்டபோதிலும் அவை சாயாதபடி தடுக்கக்கூடியவன் அல்லாஹ்வைத் தவிர வேறொருவனுமில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாக, மன்னிப்புடையவனாக இருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70