caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Faatir அத்தியாயம், வசனம் 40

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 43 · 35:40

قُلْ أَرَءَيْتُمْ شُرَكَآءَكُمُ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ أَرُونِى مَاذَا خَلَقُوا۟ مِنَ ٱلْأَرْضِ أَمْ لَهُمْ شِرْكٌ فِى ٱلسَّمَٰوَٰتِ أَمْ ءَاتَيْنَٰهُمْ كِتَٰبًا فَهُمْ عَلَىٰ بَيِّنَتٍ مِّنْهُ بَلْ إِن يَعِدُ ٱلظَّٰلِمُونَ بَعْضُهُم بَعْضًا إِلَّا غُرُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைக்கின்ற உங்கள் இணை தெய்வங்களைப் பற்றி அறிவியுங்கள்! பூமியில் அவை எதைப் படைத்தன என்று எனக்கு காண்பியுங்கள். அல்லது வானங்களில் அவர்களுக்கு ஏதும் பங்கு உண்டா? அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை கொடுத்து, அவர்கள் அது விஷயத்தில் தெளிவான சான்றின் மீது இருக்கின்றார்களா?! மாறாக, அநியாயக்காரர்கள் அவர்களில் சிலர் சிலருக்கு ஏமாற்றத்தைத் தவிர (உண்மையை) வாக்களிப்பதில்லை.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைக்கின்ற (-வணங்குகின்ற) உங்கள் (கற்பனை) தெய்வங்களைப் பற்றி எனக்கு அறிவியுங்கள்! பூமியில் அவை எதைப் படைத்தன என்று எனக்குக் காண்பியுங்கள். அல்லது, வானங்களில் (இருக்கும் படைப்புகளில்) அவர்களுக்கு ஏதும் பங்கு உண்டா? அல்லது, (இணைவைத்து வணங்குகின்ற) அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்து, அவர்கள் அது விஷயத்தில் தெளிவான சான்றின் மீது இருக்கிறார்களா?! மாறாக, அநியாயக்காரர்கள் அவர்களில் சிலர் சிலருக்கு ஏமாற்றத்தைத் தவிர வாக்களிப்பதில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi40. (நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ்வையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) அழைப்பவற்றைப் பற்றி நீங்கள் கவனித்தீர்களா? அவை பூமியில் எதையும் படைத்திருக்கின்றனவா? அதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களைப் படைப்பதில் அவற்றுக்குப் பங்குண்டா? அல்லது (அவற்றைத் தெய்வங்களெனக் கூறுவதற்குத்) தெளிவான ஆதாரமாக இருக்கின்ற ஒரு வேதத்தையாவது நாம் அவற்றுக்குக் கொடுத்திருக்கின்றோமா? (இவை ஒன்றுமே) இல்லை. (இந்தத் தெய்வங்கள் பாதுகாத்துக் கொள்ளுமென்று) இந்த அநியாயக்காரர்கள் சிலர் சிலருக்குச் செய்யும் வாக்குறுதியெல்லாம் வெறும் ஏமாற்றுதலே தவிர வேறில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70