أَفَلَمْ يَرَوْا۟ إِلَىٰ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ إِن نَّشَأْ نَخْسِفْ بِهِمُ ٱلْأَرْضَ أَوْ نُسْقِطْ عَلَيْهِمْ كِسَفًا مِّنَ ٱلسَّمَآءِ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً لِّكُلِّ عَبْدٍ مُّنِيبٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் தங்களுக்கு முன்னுள்ள இன்னும் தங்களுக்கு பின்னுள்ள வானத்தையும் பூமியையும் பார்க்கவில்லையா? நாம் நாடினால் அவர்களை பூமியில் சொருகிவிடுவோம். அல்லது அவர்கள் மீது வானத்தின் துண்டுகளை விழவைப்போம். நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பக்கூடிய எல்லா அடியார்களுக்கும் ஓர் அத்தாட்சி இருக்கின்றது.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் தங்களுக்கு முன்னுள்ள; இன்னும், தங்களுக்கு பின்னுள்ள வானத்தையும் பூமியையும் பார்க்கவில்லையா? நாம் நாடினால் அவர்களை பூமியில் சொருகிவிடுவோம். அல்லது, அவர்கள் மீது வானத்தின் துண்டுகளை விழவைப்போம். நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பக்கூடிய எல்லா அடியார்களுக்கும் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi9. வானத்திலும் பூமியிலும் அவர்களுக்கு முன்னும் பின்னும் இருப்பவற்றை அவர்கள் கவனிக்கவில்லையா? நாம் விரும்பினால் அவர்களைப் பூமிக்குள் சொருகிவிடுவோம் அல்லது வானத்திலிருந்து சில துண்டுகளை அவர்கள் மேல் எறிந்து (அவர்களை அழித்து) விடுவோம். (அல்லாஹ்வையே) நோக்கி நிற்கும் ஒவ்வொரு அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.