caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Saba அத்தியாயம், வசனம் 8

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 58 · 34:8

أَفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَم بِهِۦ جِنَّةٌۢ بَلِ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ فِى ٱلْعَذَابِ وَٱلضَّلَٰلِ ٱلْبَعِيدِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறாரா அல்லது அவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா? (என்றும் கூறுகின்றனர்.) மாறாக, மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்கள் வேதனையிலும் தூரமான வழிகேட்டிலும் இருக்கின்றனர்.
Tamil Translation - Omar Sharif“அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறாரா? அல்லது, அவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா?” (என்றும் கூறுகிறார்கள்.) மாறாக, மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்கள் தண்டனையிலும் தூரமான வழிகேட்டிலும் இருக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. என்ன, (இம்மனிதர்) ‘‘அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறுகிறாரோ அல்லது அவருக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறதோ'' (என்று அவர்களிடம் கூறுகின்றனர்.) மாறாக. எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்கள்தான் பெரும் வேதனையிலும், வெகு தூரமானதொரு வழிகேட்டிலும் இருக்கின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70