وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ هَلْ نَدُلُّكُمْ عَلَىٰ رَجُلٍ يُنَبِّئُكُمْ إِذَا مُزِّقْتُمْ كُلَّ مُمَزَّقٍ إِنَّكُمْ لَفِى خَلْقٍ جَدِيدٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரித்தவர்கள் கூறுகின்றனர்: “நீங்கள் சுக்கு நூறாக கிழிக்கப்பட்ட பின்னர் நிச்சயமாக நீங்கள் புதிய படைப்பாக உருவாக்கப்படுவீர்கள்” என்று உங்களுக்கு அறிவிக்கின்ற ஓர் ஆடவரை நாங்கள் உங்களுக்கு அறிவிக்கவா?
Tamil Translation - Omar Sharifநிராகரித்தவர்கள் கூறுகிறார்கள்: “நீங்கள் சுக்குநூறாக கிழிக்கப்பட்ட பின்னர் நிச்சயமாக நீங்கள் புதிய படைப்பாக உருவாக்கப்படுவீர்கள் என்று உங்களுக்கு அறிவிக்கிற ஓர் ஆடவரை நாங்கள் உங்களுக்கு அறிவிக்கவா?”
Tamil Translation - Abdulhamid Baqawi7. எனினும், நிராகரித்தவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (இறந்து, மக்கி) அணுவணுவாகப் பிரிக்கப்பட்டதன் பின்னரும் நிச்சயமாக நீங்கள் புதிதாகப் படைக்கப்பட்டு விடுவீர்கள் என்று உங்களுக்கு (பயமுறுத்தி)க் கூறக்கூடிய ஒரு மனிதரை நாம் உங்களுக்கு அறிவிக்கவா'' என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.