وَيَرَى ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ ٱلَّذِىٓ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ هُوَ ٱلْحَقَّ وَيَهْدِىٓ إِلَىٰ صِرَٰطِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகல்வி கொடுக்கப்பட்டவர்கள் உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை அதுதான் சத்தியம் என்றும் மிகைத்தவன், மகா புகழுக்குரியவனின் பாதைக்கு நேர்வழி காட்டுகிறது என்றும் அறிவார்கள்.
Tamil Translation - Omar Sharifகல்வி கொடுக்கப்பட்டவர்கள், உமது இறைவனிடமிருந்து உமக்கு எது இறக்கப்பட்டதோ அதுதான் சத்தியம் என்றும்; மிகைத்தவன், மகா புகழுக்குரியவனின் பாதைக்கு அது நேர்வழி காட்டுகிறது என்றும் அறிவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. (நபியே!) எவர்களுக்கு ஞானம் கொடுக்கப்பட்டதோ அவர்கள் உமக்கு இறக்கப்பட்ட இவ்வேதத்தை, உமது இறைவனால் அருளப்பட்ட உண்மையான வேதம் என்றும்; அது அனைவரையும் மிகைத்த மிக்க புகழுக்குரியவனின் நேரான வழியை அறிவிக்கக்கூடியது என்றும் எண்ணுவார்கள்.