قُلْ جَآءَ ٱلْحَقُّ وَمَا يُبْدِئُ ٱلْبَٰطِلُ وَمَا يُعِيدُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! உண்மை (இந்த குர்ஆன்) வந்துவிட்டது. பொய்யன் (இப்லீஸ்) புதிதாக படைக்கவும் மாட்டான். (இறந்ததை) மீண்டும் உயிர்ப்பிக்கவும் மாட்டான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக! “(குர்ஆன் என்ற) உண்மை வந்துவிட்டது. (இப்லீஸும் அல்லாஹ்வை அன்றி வணங்கப்படுகிற) பொய்யான தெய்வங்கள் புதிதாக படைக்கவும் மாட்டார்கள். (இறந்ததை) மீண்டும் உயிர்ப்பிக்கவும் மாட்டார்கள்.” (அல்லாஹ்வை அன்றி யாருக்கும் படைக்கின்ற சக்தி அறவே இல்லை.)
Tamil Translation - Abdulhamid Baqawi49. (மேலும்) கூறுவீராக: ‘‘உண்மை வந்துவிட்டது. பொய் புதிதாக எதையும் (இதுவரை) செய்து விடவில்லை. இனியும் செய்யப் போவதில்லை.''