وَلَوْ تَرَىٰٓ إِذِ ٱلْمُجْرِمُونَ نَاكِسُوا۟ رُءُوسِهِمْ عِندَ رَبِّهِمْ رَبَّنَآ أَبْصَرْنَا وَسَمِعْنَا فَٱرْجِعْنَا نَعْمَلْ صَٰلِحًا إِنَّا مُوقِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகுற்றவாளிகள் தங்கள் இறைவனிடம் தங்கள் தலைகளை தாழ்த்தியவர்களாக, எங்கள் இறைவா! நாங்கள் (உனது தண்டனையை கண்கூடாகப்) பார்த்தோம்; (உனது தூதர்களை நீ உண்மைப்படுத்தியதையும்) நாங்கள் செவிமடுத்தோம். ஆகவே, எங்களை (உலகிற்கு) திரும்ப அனுப்பு! நாங்கள் நற்செயல்களைச் செய்வோம். (நீதான் வணக்கத்திற்குரியவன்; நீ கூறிய மறுமை, சொர்க்கம், நரகம் எல்லாம் உண்மை என்று இப்போது) நிச்சயமாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று கூறுகின்ற சமயத்தை நீர் பார்த்தால் (அது திடுக்கம் மிகுந்த காட்சியாக இருக்கும்).
Tamil Translation - Omar Sharifகுற்றவாளிகள் தங்கள் இறைவனிடம் தங்கள் தலைகளை தாழ்த்தியவர்களாக, எங்கள் இறைவா! நாங்கள் (உனது தண்டனையை கண்கூடாகப்) பார்த்தோம்; இன்னும், (உனது தூதர்களை நீ உண்மைப்படுத்தியதையும்) நாங்கள் செவியுற்றோம். ஆகவே, எங்களை (உலகிற்கு) திரும்ப அனுப்பு! நாங்கள் நற்செயல்களைச் செய்வோம். (நீதான் வணக்கத்திற்குரியவன்; நீ கூறிய மறுமை, சொர்க்கம், நரகம் எல்லாம் உண்மை என்று இப்போது) நிச்சயமாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று கூறுகிற சமயத்தை நீர் பார்த்தால் (அது திடுக்கம் மிகுந்த ஒரு காட்சியாக இருக்கும்).
Tamil Translation - Abdulhamid Baqawi12. (நபியே! விசாரணைக்காக) இக்குற்றவாளிகள் தங்கள் இறைவன் முன் (நிறுத்தப்படும் சமயத்தில்) தலை குனிந்தவர்களாக “எங்கள் இறைவனே! எங்கள் கண்களும் காதுகளும் திறந்து கொண்டன. (நாங்கள் அனைத்தையும் பார்த்தும் கேட்டும் தெரிந்தும் கொண்டோம். முந்திய உலகிற்கு ஒரு தடவை) எங்களை திரும்ப அனுப்பிவை. நாங்கள் நற்செயல்களையே செய்வோம். நிச்சயமாக நாங்கள் (இந்த விசாரணை நாளை) உறுதியாக நம்புகிறோம்'' என்று கூறுவதை நீர் காண்பீராயின் (அவர்களுடைய நிலைமை எவ்வளவு கேவலமாயிருக்கும் என்பதை அறிந்து கொள்வீர்.)