وَمِنَ ٱلنَّاسِ مَن يَشْتَرِى لَهْوَ ٱلْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ ٱللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகல்வி இன்றி அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காகவும், அதை (-அல்லாஹ்வின் பாதையை) பரிகாசமாக எடுத்துக் கொள்வதற்காகவும் வீண் பேச்சை விலைக்கு வாங்குபவன் மக்களில் இருக்கின்றான். இத்தகையவர்களுக்கு (அவர்களை) இழிவுபடுத்தும் வேதனை உண்டு.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காகவும், அதை பரிகாசமாக எடுத்துக் கொள்வதற்காகவும் கல்வி இன்றி வீண் பேச்சை விலைக்கு வாங்குபவன் மக்களில் இருக்கிறான். இத்தகையவர்களுக்கு (அவர்களை) இழிவுபடுத்தும் தண்டனை உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi6. (இவர்களைத் தவிர) மனிதரில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக்கதைகள் முதலிய) வீணான விஷயங்களை விலைக்கு வாங்கி (அவற்றை மக்களுக்கு ஓதிக் காண்பித்து) அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் இருந்து ஞானமின்றி மக்களை வழிகெடுத்து அதைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு.