caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Luqman அத்தியாயம், வசனம் 7

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 57 · 31:7

وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا وَلَّىٰ مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِىٓ أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுக்கு முன் நமது வசனங்கள் ஓதப்பட்டால் பெருமையடித்தவனாக திரும்பி விடுகின்றான் -அவற்றை அவன் செவிமடுக்காததைப் போன்று, அவனுடைய இரண்டு காதுகளில் மந்தம் இருப்பதைப் போன்று. வலிமிகுந்த வேதனையைக் கொண்டு அவனுக்கு நற்செய்தி கூறுவீராக!
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவனுக்கு முன் நமது வசனங்கள் ஓதப்பட்டால் பெருமையடித்தவனாக திரும்பி விடுகிறான் - அவற்றை அவன் செவியுறாததைப் போன்று, அவனுடைய இரண்டு காதுகளில் மந்தம் இருப்பதைப் போன்று. ஆகவே, வலிமிகுந்த தண்டனையைக் கொண்டு அவனுக்கு நற்செய்திக் கூறுவீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi7. இவர்களில் எவருக்கும் நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதை அவன் கேட்காதவனைப் போலும், தன் இரு காதுகளிலும் செவிடு உள்ளவனைப் போலும் கர்வம்கொண்டு விலகிவிடுகிறான். ஆகவே, (நபியே!) அவனுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு நீர் நற்செய்தி கூறுவீராக!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70