caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Luqman அத்தியாயம், வசனம் 21

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 57 · 31:21

وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّبِعُوا۟ مَآ أَنزَلَ ٱللَّهُ قَالُوا۟ بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ ءَابَآءَنَآ أَوَلَوْ كَانَ ٱلشَّيْطَٰنُ يَدْعُوهُمْ إِلَىٰ عَذَابِ ٱلسَّعِيرِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் இறக்கியதை பின்பற்றுங்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டால், மாறாக, எங்கள் மூதாதைகளை நாங்கள் எதன் மீது கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறுகின்றனர். கொழுந்து விட்டெரியும் நரக வேதனையின் பக்கம் ஷைத்தான் அவர்களை அழைப்பவனாக இருந்தாலுமா?
Tamil Translation - Omar Sharifஇன்னும், அல்லாஹ் இறக்கியதை பின்பற்றுங்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டால், மாறாக, எங்கள் மூதாதைகளை நாங்கள் எதன் மீது கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறுகிறார்கள். கொழுந்து விட்டெரியும் நரக தண்டனையின் பக்கம் ஷைத்தான் அவர்களை அழைப்பவனாக இருந்தாலுமா (இவர்கள் ஷைத்தானின் வழிகாட்டலைப் பின்பற்றுவார்கள்)?
Tamil Translation - Abdulhamid Baqawi21. அவர்களை நோக்கி, ‘‘அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்'' எனக் கூறினால், அதற்கு அவர்கள் ‘‘ இல்லை, எங்கள் மூதாதைகள் எதன் மீது இருக்க நாங்கள் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். (என்னே!) அவர்கள் மூதாதைகளை ஷைத்தான் நரக வேதனையின் பக்கம் அழைத்து (அவர்களும் சென்று) இருந்தாலுமா? (இவர்கள் அவர்களைப் பின்பற்றிச் செல்வார்கள்!)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70