أَلَمْ تَرَوْا۟ أَنَّ ٱللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُۥ ظَٰهِرَةً وَبَاطِنَةً وَمِنَ ٱلنَّاسِ مَن يُجَٰدِلُ فِى ٱللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَٰبٍ مُّنِيرٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் உங்களுக்கு வசப்படுத்தினான். உங்கள் மீது தனது அருட்கொடைகளை வெளிப்படையாகவும் மறைவாகவும் நிறைவாக்கினான். கல்வி இன்றியும் நேர்வழி இன்றியும் பிரகாசமான வேதமின்றியும் அல்லாஹ்வின் விஷயத்தில் தர்க்கம் செய்கின்றவரும் மக்களில் இருக்கின்றனர்.
Tamil Translation - Omar Sharifநீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் உங்களுக்கு வசப்படுத்தினான். இன்னும், உங்கள் மீது தனது அருட்கொடைகளை வெளிப்படையாகவும் மறைவாகவும் நிறைவாக்கினான். அல்லாஹ்வின் விஷயத்தில் கல்வி இன்றியும் நேர்வழி இன்றியும் பிரகாசமான வேதமின்றியும் தர்க்கம் செய்பவர்கள் மக்களில் இருக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi20. (மனிதர்களே!) வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான் என்பதையும், அவன் தன் அருட் கொடைகளை மறைவாகவும் வெளிப்படையாகவும் உங்கள் மீது சொரிந்திருக்கிறான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? (இவ்வாறெல்லாமிருந்தும்) மனிதர்களில் பலர் ஒரு கல்வியும், (தர்க்க ரீதியான) வழிகாட்டலும், தெளிவான வேத நூலின் ஆதாரமுமின்றி அல்லாஹ்வைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்கின்றனர்.