وَإِن جَٰهَدَاكَ عَلَىٰٓ أَن تُشْرِكَ بِى مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِى ٱلدُّنْيَا مَعْرُوفًا وَٱتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَىَّ ثُمَّ إِلَىَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉனக்கு அறிவில்லாத ஒன்றை எனக்கு நீ இணையாக்குவதற்கு அவர்கள் உன்னை சிரமப்படுத்தினால், (-அதற்காக உன் மீது அவர்கள் முழு முயற்சி செய்தால்) அவ்விருவருக்கும் நீ கீழ்ப்படியாதே! (ஆனால்) உலக(விஷய)த்தில் அவ்விருவருடன் நல்லமுறையில் பழகுவாயாக! என் பக்கம் திரும்பியவர்களின் பாதையை நீ பின்பற்று! பிறகு, என் பக்கம்தான் உங்கள் (அனைவருடைய) மீளுமிடம் இருக்கின்றது. நீங்கள் செய்துகொண்டிருந்ததை நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், உனக்கு அறிவில்லாத ஒன்றை எனக்கு நீ இணையாக்குவதற்கு அவர்கள் உன்னை கட்டாயப்படுத்தினால் அவ்விருவருக்கும் நீ கீழ்ப்படியாதே! (ஆனால்) உலக (விஷய)த்தில் அவ்விருவருடன் நல்ல முறையில் பழகுவாயாக! என் பக்கம் திரும்பிய (நல்ல)வர்களின் பாதையை நீ பின்பற்று! பிறகு, என் பக்கம்தான் உங்கள் (அனைவருடைய) மீளுமிடம் இருக்கிறது. ஆக, நீங்கள் செய்துகொண்டிருந்ததை நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
Tamil Translation - Abdulhamid Baqawi15. எனினும், (இறைவன் என்று) நீ அறிந்துகொள்ளாத ஒரு பொருளை எனக்கு இணைவைக்கும்படி அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விஷயத்தில்) நீ அவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டாம். ஆயினும், இவ்வுலக விஷயத்தில் நீ அவர்களுக்கு (நீதமாக) உதவி செய்து (அன்பாக) நேசித்துவா. எவ்விஷயத்திலும் என்னையே நோக்கி நிற்பவர்களின் வழியை நீ பின்பற்றி நட. பின்னர், நீங்கள் அனைவரும் நம்மிடமே வரவேண்டியதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அச்சமயம் நான் உங்களுக்கு அறிவுறுத்துவேன்'' (என்று கூறினோம்).