caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Luqman அத்தியாயம், வசனம் 14

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 57 · 31:14

وَوَصَّيْنَا ٱلْإِنسَٰنَ بِوَٰلِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُۥ وَهْنًا عَلَىٰ وَهْنٍ وَفِصَٰلُهُۥ فِى عَامَيْنِ أَنِ ٱشْكُرْ لِى وَلِوَٰلِدَيْكَ إِلَىَّ ٱلْمَصِيرُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமனிதனுக்கு அவனது பெற்றோருடன் நல்லுறவு பேணும்படி நாம் உபதேசித்தோம். அவனது தாய் அவனை பலவீனத்துக்கு மேல் பலவீனத்துடன் (-கஷ்டத்திற்கு மேல் கஷ்டத்துடன்) சுமந்தாள். அவனுக்கு பால்குடி மறக்க வைப்பது இரண்டு ஆண்டுகளில் ஆகும். அதாவது நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து! என் பக்கம்தான் மீளுதல் இருக்கிறது.
Tamil Translation - Omar Sharifஇன்னும், மனிதனுக்கு - அவனது பெற்றோருடன் நல்லுறவு பேணும்படி - நாம் உபதேசித்தோம். அவனது தாய் அவனை பலவீனத்துக்கு மேல் பலவீனத்துடன் (-சிரமத்திற்கு மேல் சிரமத்துடன்) சுமந்தாள். அவனுக்கு பால்குடி மறக்க வைப்பது இரண்டு ஆண்டுகளில் ஆகும். அதாவது, நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து! என் பக்கம்தான் மீளுதல் இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi14. ‘‘ தனது தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்து கொண்டலைந்தாள். (பிறந்த) பிறகும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன் தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. முடிவில் நீ நம்மிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70