caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Room அத்தியாயம், வசனம் 50

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 84 · 30:50

فَٱنظُرْ إِلَىٰٓ ءَاثَٰرِ رَحْمَتِ ٱللَّهِ كَيْفَ يُحْىِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَآ إِنَّ ذَٰلِكَ لَمُحْىِ ٱلْمَوْتَىٰ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, அல்லாஹ்வுடைய அருளின் அடையாளங்களைப் பார்ப்பீராக! பூமியை அது மரணித்த பின்னர் அவன் எப்படி உயிர்ப்பிக்கின்றான் (என்பதை கவனியுங்கள்)! நிச்சயமாக அவன்தான் இறந்தவர்களையும் உயிர்ப்பிப்பவன் ஆவான். அவன் எல்லா பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஆக, அல்லாஹ்வுடைய அருளின் அடையாளங்களைப் பார்ப்பீராக! பூமியை - அது மரணித்த பின்னர் - அவன் எப்படி உயிர்ப்பிக்கிறான் (என்பதைக் கவனியுங்கள்)! நிச்சயமாக அவன்தான் இறந்தவர்களையும் உயிர்ப்பிப்பவன் ஆவான். அவன் எல்லா பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi50. (நபியே!) அல்லாஹ்வின் இவ்வருளால் ஏற்படும் பலன்களை நீர் கவனிப்பீராக! இறந்துபோன பூமியை எவ்வாறு செழிக்கச் செய்கிறான்! (இவ்வாறே) நிச்சயமாக அவன் இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கச் செய்வான். அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70