caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Room அத்தியாயம், வசனம் 51

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 84 · 30:51

وَلَئِنْ أَرْسَلْنَا رِيحًا فَرَأَوْهُ مُصْفَرًّا لَّظَلُّوا۟ مِنۢ بَعْدِهِۦ يَكْفُرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் ஒரு காற்றை அனுப்பி(னால், அது அவர்களது விளைச்சலை அழித்து விட்ட பின்னர்) அதை (-அந்த விளைச்சலை) அவர்கள் மஞ்சளாக பார்த்தால் அதற்குப் பின்னர் (-அழிந்த பின்னர்) அவர்கள் (அல்லாஹ்வை) நிராகரிக்கின்றவர்களாக ஆகிவிடுகின்றனர்.
Tamil Translation - Omar Sharifநாம் ஒரு காற்றை அனுப்பி(னால், அது அவர்களது விளைச்சலை அழித்துவிட்ட பின்னர்) அதை (-அந்த விளைச்சலை) அவர்கள் மஞ்சளாக பார்த்தால் அ(து அழிந்த)தற்குப் பின்னர் அவர்கள் (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi51. (மழையில்லாத வெறும் வறண்ட) காற்றை நாம் அனுப்பி (அதனால் தங்கள் பயிர்கள்) மஞ்சளாயிருப்பதை அவர்கள் கண்டால், முன்னர் நாம் அவர்களுக்குச் செய்திருந்த அருளையுமே அவர்கள் நிராகரித்து விடுகின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70