caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Room அத்தியாயம், வசனம் 32

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 84 · 30:32

مِنَ ٱلَّذِينَ فَرَّقُوا۟ دِينَهُمْ وَكَانُوا۟ شِيَعًا كُلُّ حِزْبٍۭ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதங்களது மார்க்கத்தை பிரித்து பல பிரிவுகளாக ஆகிவிட்டவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள். ஒவ்வொரு கட்சியும் தங்களிடம் உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றனர்.
Tamil Translation - Omar Sharifதங்களது மார்க்கத்தை(யும் வழிபாடுகளையும் இறைவன் அல்லாதவர்களுக்காக) பிரித்து பல (கடவுள்களை வணங்கி, பல) பிரிவுகளாக ஆகிவிட்டவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள். ஒவ்வொரு பிரிவும் தங்களிடம் உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியடைகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi32. (தவிர) எவர்கள் தங்கள் மார்க்கத்திற்குள் பிரிவினையை உண்டு பண்ணி, பல பிரிவுகளாகப் பிரித்து, அவர்கள் ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ள (தவறான)வற்றைக் கொண்டு சந்தோஷப்படுகின்றனரோ அவர்களுடன் சேர்ந்து விடாதீர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70