مُنِيبِينَ إِلَيْهِ وَٱتَّقُوهُ وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَلَا تَكُونُوا۟ مِنَ ٱلْمُشْرِكِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் பக்கம் முற்றிலும் திரும்பியவர்களாக (இருங்கள்). இன்னும் அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். இன்னும், தொழுகையை நிறைவேற்றுங்கள். இணைவைப்பவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
Tamil Translation - Omar Sharif(நீங்கள் அனைவரும்) அவன் பக்கம் முற்றிலும் திரும்பியவர்களாக இருங்கள். இன்னும், அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். இன்னும், தொழுகையை நிலை நிறுத்துங்கள். இணைவைப்பவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi31. (நம்பிக்கையாளர்களே! நீங்களும்) அவன் ஒருவனிடமே திரும்பி (இஸ்லாம் மார்க்கத்தின் மீது உறுதியாக இருந்து) அவ(ன் ஒருவ)னுக்கே பயந்து தொழுகையையும் கடைப்பிடித்து நடந்து கொள்ளுங்கள். இணைவைத்து வணங்குபவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்.