caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Room அத்தியாயம், வசனம் 33

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 84 · 30:33

وَإِذَا مَسَّ ٱلنَّاسَ ضُرٌّ دَعَوْا۟ رَبَّهُم مُّنِيبِينَ إِلَيْهِ ثُمَّ إِذَآ أَذَاقَهُم مِّنْهُ رَحْمَةً إِذَا فَرِيقٌ مِّنْهُم بِرَبِّهِمْ يُشْرِكُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமக்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்தால் தங்கள் இறைவனை -அவன் பக்கம் முற்றிலும் திரும்பியவர்களாக- அழைக்கின்றனர். பிறகு, அவன் தன் புறத்திலிருந்து அவர்களுக்கு (தனது) அருளை சுவைக்க வைத்தால் அப்போது அவர்களில் ஒரு சாரார் தங்கள் இறைவனுக்கு இணைவைக்கின்றனர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், மக்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்தால் தங்கள் இறைவனை - அவன் பக்கம் முற்றிலும் திரும்பியவர்களாக - அழைக்கிறார்கள். பிறகு, அவன் தன் புறத்திலிருந்து அவர்களுக்கு (தனது) அருளை சுவைக்க வைத்தால் அப்போது அவர்களில் ஒரு சாரார் தங்கள் (பொய்யான தெய்வங்களை) இறைவனுக்கு இணைவைக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi33. மனிதர்களை ஒரு தீங்கு அணுகும் போது அவர்கள் தங்கள் இறைவன் பக்கம் முகம் நோக்கி அவனிடம் பிரார்த்திக்கிறார்கள். பின்னர் அவன் (அதை நீக்கி) அவர்களைத் தன் அருளைச் சுவைக்கும்படிச் செய்தால் அவர்களில் ஒரு பிரிவினர் தங்கள் இறைவனுக்கே இணை வைக்கின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70