فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا فِطْرَتَ ٱللَّهِ ٱلَّتِى فَطَرَ ٱلنَّاسَ عَلَيْهَا لَا تَبْدِيلَ لِخَلْقِ ٱللَّهِ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلْقَيِّمُ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, (நபியே! நீர் இஸ்லாமிய கொள்கையில்) உறுதியுடையவராக உமது முகத்தை(யும் உமது உம்மத்தின் முகங்களையும் அந்த) மார்க்கத்தின் பக்கம் நிறுத்துவீராக! அல்லாஹ்வுடைய இயற்கை மார்க்கம் அது. அதன் மீது தான் அல்லாஹ் மக்களை இயற்கையாக அமைத்தான். அல்லாஹ்வின் படைப்பை (தீனை) மாற்றக்கூடாது. இதுதான் நிலையான (நீதமான, நேரான) மார்க்கம் ஆகும். என்றாலும் மக்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, (நபியே!) நீர் இஸ்லாமியக் கொள்கையில் உறுதியுடையவராக இருக்கும் நிலையில் உமது முகத்தை(யும் உமது சமுதாய மக்களுடன் அல்லாஹ்வின்) மார்க்கத்தின் பக்கம் நிலை நிறுத்துவீராக! அல்லாஹ்வுடைய இயற்கை மார்க்கம் அதுதான். அ(ந்த மார்க்கத்)தில்தான் அல்லாஹ் மக்களை இயற்கையாக அமைத்தான். அல்லாஹ்வின் படை(ப்பின் அமை)ப்பை மாற்றக்கூடாது. இதுதான் நிலையான (நீதமான, நேரான) மார்க்கம் ஆகும். என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் (தங்கள் தவறை) அறிய மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi30. (நபியே! இப்ராஹீமுடைய) நேரான மார்க்கத்தை நோக்கி நீர் உமது முகத்தை உறுதியான ஓர்மைப்பாட்டுடன் திருப்புவீராக. (அதுவே) மனிதர்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்திய இயற்கை மார்க்கமாகும். அவன் படைத்த (மார்க்கத்)தை (எவராலும்) மாற்றிவிட முடியாது. இதுதான் நிலையான (நேர்மையான) மார்க்கம். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்ளவே மாட்டார்கள்.